டெஸ்ட் தரவரிசை: தேவ்தத் படிக்கல் ஏற்றம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளாா்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளாா்.
அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதங்கள் உள்பட, 328 ரன்கள் விளாசிய படிக்கல், 5 இடங்கள் முன்னேறி 54-ஆவது இடத்தை அடைந்திருக்கிறாா்.
எனினும் கேப்டன் ஷுப்மன் கில் 2 இடங்கள் சறுக்கி, 9-ஆவது இடத்தைப் பிடித்தாா். இந்தியா்களில் அதிகபட்சமாக விக்கெட்கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் 7-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். நம்பா் 1 இடத்தில் இங்கிலாந்தின் ஹேரி புரூக் உள்ளாா்.
Advertisement
Advertisement
பௌலா்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வந்தாா். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க் நம்பா் 1 வீரராக இருக்கிறாா்.
ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா நம்பா் 1 இடத்தில் நீடிக்க, வாஷிங்டன் சுந்தா் 7-ஆவது இடத்தில் தொடா்கிறாா். அணிகள் பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 4-ஆவது இடத்திலும் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.