FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கம்பேக் வெற்றி: தம்பிகளுக்காக வில் - அம்பு கொண்டாட்டத்தில் அல்கராஸ்..! வைரல் விடியோ!

யுஎஸ் ஓபனில் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் செய்த புதிய கொண்டாட்டம் வைரல் ஆகியிருப்பது குறித்து...

3 செப்டம்பர் 2026, 4:07 pm IST
வெற்றிக் களிப்பில் கார்லோஸ் அல்கராஸ். - படம்: ஏபி
பகிர்:

யுஎஸ் ஓபனில் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் (23 வயது) தனது புதிய கொண்டாட்டத்தினால் கவனம் பெற்றுள்ளார். தனது சகோதரர்களின் ஆசைக்காக இப்படி செய்ததாகக் கூறியுள்ளார்.

கடின தரையின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் சுற்றில் கார்லோஸ் அல்கராஸ் - ஜேமி ஃபரியா மோதினார்கள்.

இந்தப் போட்டியில் அல்கராஸ் முதல் செட்டை இழந்தார். இருப்பினும் அடுத்த செட்களில் கம்பேக் அளித்து வென்றார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டி 160 நிமிஷங்கள் நடைபெற்றன. இறுதியில் 4-6, 6-0, 6-3, 6-2 என அல்கராஸ் அசத்தல் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு அவர் வில் - அம்பு எய்துவது போல் கொண்டாடினார்.

இந்தப் புதிய கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்தக் கொண்டாம் குறித்து போட்டிக்குப் பிறகு அல்கராஸ் பேசியிருப்பதாவது:

எனது இரண்டு தம்பிகள் இங்கு வந்துள்ளார்கள். அவர்கள்தான் என்னை இந்த அம்பு எய்வதுபோல் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அதனால், அந்தத் தருணம் அவர்களுக்கானது எனக் கூறினார்.

summary

Carlos Alcaraz celebrates with bow-and-arrow after comeback win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments