FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய அல்கராஸ்..! ஷபோவலோவ் காயத்தால் வெளியேற்றம்!

ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் குறித்து...

வெற்றிக் களிப்பில் கார்லோஸ் அல்கராஸ் - AFP
பகிர்:

ஜப்பான் ஓபனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஷபோவலோவ் காயத்தினால் வெளியேறியதால், கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சீன ஓபனில் பங்கேற்காமல் ஜப்பான் ஓபனில் பங்கேற்று வரும் அல்கராஸ் தனது டோக்கியோ பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் செப்.28 முதல் அக்.6ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

Advertisement

Advertisement

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் - கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் 7-6 (4), 2-1 என நடப்பு சாம்பியன் அல்கராஸ் முன்னிலையில் இருந்தார். 82ஆவது நிமிஷத்தில் கனட வீரர் காயத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

முதல் செட்டில் கனட வீரர் அல்கராஸுக்கு 5-4 என கடினமான சூழ்நிலையை உருவாக்கினார். இருப்பினும் நடப்பு சாம்பியன் டைபிரேக்கரில் வென்றார்.

ஜப்பான் ஓபன் அரையிறுதியில் நாளை சக ஸ்பெயின் வீரர் ஜௌம் முனார் உடன் மோதவிருக்கிறார். கடந்த வாரம் லேவர் கோப்பையில் விளையாடிய அல்கராஸ் ஐரோப்பைவுக்கு கோப்பை வெல்ல உதவினார்.

summary

Alcaraz advances to Tokyo semifinals after Shapovalov injury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments