FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ்..! ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டம் வெல்வாரா?

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ் குறித்து...

15 அக்டோபர் 2026, 6:05 pm IST
காலிறுதியில் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரெவ் - படம்: ஏபி
பகிர்:

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் வென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் உடன் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினார். இந்தப் போட்டியில் 6-4, 6-4 என நேர் செட்களில் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.

இந்தப் போட்டியில் ஸ்வெரெவ் தொடர்ச்சியாக 3 கேம்களை வென்றார். சர்வீஸ் மூலமாக 10 கேம்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ் ஸ்பானிஷ் வீரர் அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா உடன் வரும் சனிக்கிழமை மோதவிருக்கிறார்.

அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா தனது காலிறுதிப் போட்டியில் அர்துர் கீ உடன் மோதினார். இதில் காயம் காரணமாக அர்துர் வெளியேற, அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

போட்டித் தரவரிசையில் ஸ்வெரெவ் 2ஆவது இடத்திலும் டேவிடோவிச் ஃபோகினா 25ஆவது இடத்திலும் இருக்கிறார் இந்தாண்டின் இறுதியில் ஸ்வெரெவ் முதலிடத்துக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், ஆடவர் ஒற்றையா் பிரிவில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சமீபத்தில் சாம்பியன் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

summary

Alexander Zverev cruises past De Minaur to reach Shanghai semi-finals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments