FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புகழ்பெற்ற லடாக் மாரத்தான்: உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற லடாக் மாரத்தானில் உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்றனர்.

13 செப்டம்பர் 2026, 4:11 pm IST
லடாக் மாரத்தான்
பகிர்:

இந்தியாவின் புகழ்பெற்ற லடாக் மாரத்தானின் 13-வது ஆண்டு தொடர் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 8,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

13-வது லடாக் மாரத்தான் செப்டம்பர் 10 முதல் 13 வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கடைசி நாளான இன்று முழு மாரத்தான் (42.195 கிமீ), அரை மாரத்தான் (21.1 கிமீ), 11.2 கிமீ ஓட்டம் போன்றவை நடைபெறுகின்றது.

இந்த மாரத்தானை லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

சகிப்புத்தன்மை, மனவுறுதி மற்றும் சாகச உணர்வின் கீழ் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் லடாக்கில் ஒன்று கூடுவதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மாரத்தான் பிரபலமடைந்து வருவது, உலகளவில் இதனை ஒரு மதிப்புமிக்க விளையாட்டாக நிலைநிறுத்தியுள்ளது” என்று பேசினார்.

லடாக் மாரத்தான்:

லடாக் மாரத்தான் என்பது உலகின் மிக உயரமான, கடினமான மாரத்தான் போட்டிகளில் ஒன்று. லடாக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இது நடைபெறுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,500 அடி முதல் 17,618 அடி (3.5 கிமீ - 5.3 கி.மீ) உயரத்தில் இந்த மாரத்தான் நடைபெறுகிறது. அந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்குமென்பதால் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு சவாலான பந்தயமாக இது பார்க்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, அங்குள்ள மக்களுக்கு உந்துதல் அளிக்கும் விதமாக 2012 ஆம் ஆண்டு இந்த மாரத்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

போட்டியின் பிரிவுகள்:

லடாக் மாரத்தானில் 5 வகையான பிரிவுகள் உள்ளன.

1. சில்க் ரூட் அல்ட்ரா மாரத்தான் (122 கி.மீ) - 122 கி.மீ தூரத்திற்கு மலைப்பாதைகளில் நடத்தப்படும் மிகக் கடினமான மாரத்தான் இது.

2. கர்துங் லா சேலஞ்ச் (72 கி.மீ) - உலகின் மிக உரந்த மோட்டார் வாகன வழிப்பாதையான கர்துங் லா கணவாய் வழியாகச் செல்லும் அல்ட்ரா மாரத்தான் இது.

முதல் 2 பிரிவுகளில் பங்கேற்க முழு மாரத்தான் போட்டிகளை குறிப்பிட்ட வேகத்தில் ஓடி முடித்ததற்கான சான்றிதழ்கள் அவசியம்.

3. முழு மாரத்தான் (42.2 கி.மீ) - லே நகரம் மற்றும் சிந்து நதிக்கரை வழியே உள்ள 42.2 கி.மீ பாதையில் நடைபெறும் மாரத்தான் இது.

4. அரை மராத்தான் (21.1 கி.மீ)

5. 11.2 கி.மீ ஓட்டம் & 5 கி.மீ பொழுதுபோக்கு ஓட்டம் - ஆரம்பநிலை ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கும் குறுகிய தூர ஓட்டம் இது.

உயரமான இடங்களில் உடல் பழகவேண்டும் என்பதற்காக, மாரத்தானில் பங்கேற்பவர்கள் முன்னரே பதிவு செய்து 7 முதல் 14 நாள்களுக்கு முன்பாக லே பகுதியில் வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி.

summary

8,000 athletes from across the world participated in India's renowned Ladakh Marathon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments