சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைந்ததே சுற்றுலா வளர்ச்சி! லடாக் தலைமைச் செயலர்
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில் லடாக் தலைமைச் செயலர் ஆஷிஷ் குந்த்ரா பேசியது...
சுற்றுலா வளர்ச்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்று லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலர் ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட லடாக் தலைமைச் செயலர் ஆஷிஷ் குந்த்ரா, ’பண்பாடு, இயற்கை, சாகசம் – உலகின் உச்சிக்கு ஒரு பயணம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
லடாக்கின் அடையாளம் பெரும்பாலும் அதன் பௌத்த மடாலய மரபுகள் மூலமே பார்க்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள பிற சமூகங்கள் மற்றும் கலாசார தாக்கங்களும் அதன் பாரம்பரியத்தின் முக்கிய பகுதியாகத் திகழ்கின்றன.
சில்க் சாலையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய செதுக்கல்களைக் கொண்ட இந்த பாறைக் கற்களில் சில திபெத்திய எழுத்துக்களிலும், சில சீன மொழியிலும், சில அரபு மொழியிலும் உள்ளன.
லே - கார்கில் வழித்தடம் முழுவதும் திறந்தவெளி கலைப் படைப்புகளை அமைப்பதற்காக லடாக் மற்றும் சர்வதேச அளவிலான இளம் கலைஞர்களை ஒன்றிணைத்து சா லடாக் பியன்னாலே 2026 போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
லடாக் என்பது அதிகளவிலான மக்களை ஒருங்கிணைக்கும் சுற்றுலாவுக்கான இடம் அல்ல. நாம் ஒருபோதும் லடாக்கை கோவாவைப் போல மாற்ற விரும்பக்கூடாது. லடாக் தனக்கே உரித்தான தனித்துவத்துடன் திகழ்வதே சிறந்தது.
சியாச்சின், டிராஸ் போன்ற பகுதிகளுடன் சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளன. லே விமான நிலையத்தில் புதிய முனையம் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு விமானப் போக்குவரத்துத் திறன் மேலும் அதிகரிக்கும்.
சுற்றுலா வளர்ச்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் இணைந்து இருக்க வேண்டும். உள்ளூர் சமூகங்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளன. கழிவுப் பிரிப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளையும் லடாக் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Tourism development must go hand in hand with environmental protection! – Ladakh Chief Secretary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.