சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீராங்கனைகள்!
ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீராங்கனைகள் குறித்து...
ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரத்துக்கு விளையாட்டு வீராங்கனைகள் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்கள்.
பிரபலமான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி பல படங்களில் நடித்திருந்தாலும் ‘யூபோரியா’ என்ற இணையத் தொடரின் மூலமாக உலக அளவில் புகழ்பெற்றார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாடலாகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், புதிய விளம்பரம் ஒன்றில் நிர்வாணமாக நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
Advertisement
Advertisement
நோவிக் என்ற விளையாட்டு சார்ந்த பெட்டிங் நிறுவனத்துக்கு நடிகை சிட்னி ஸ்வீனி கால்பந்து, கூடைப் பந்து, பேஸ் பால், டென்னிஸ் பொருள்கள் உடன் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்தக் காட்சிகள் சர்ச்சையான நிலையில் வீராங்கனைகள் பலரும் இதனை கடுமையாக கண்டித்துள்ளார்கள். இது குறித்து நான்கு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அரிர்னே டிமுஸ், “அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது எனக்கு வந்த சினத்தினை விளக்கமுடியவில்லை” எனக் கூறியிருந்தார்.
பிரிட்டன் தடகள வீராங்கனை அமி ஹண்ட், “பெண்களின் உடலை பணமாக்குவதும் பெண்களின் விளையாட்டை ஆபாசமாக்குவதும் நடந்து வருகிறது எனில் நாம் எப்படி இந்த உலகில் வாழ்வது?” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கிரேசியா க்ராமர், “சிட்னி ஸ்வீனி, இப்படித்தான் பெண்கள் விளையாட்டில் இருக்க வேண்டுமா? தசைகள், கடின உழைப்பு, வியர்வை, ரத்தம், அழுகை என இருக்கிறார்கள். பெண்களை ஆபாசமாக மாற்றியிருப்பதற்கு எதிராகவே என் வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறேன்” எனக் காட்டமாக இன்ஸ்டாவில் பேசியுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு நடிகையோ அல்லது அந்த பெட்டிங் நிறுவனமோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.
Female athletes accuse Sydney Sweeney ad of sexualizing women in sports
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.