ஆசிய விளையாட்டுப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய பாட்மின்டன் பெண்கள் அணி!
ஆசிய விளையாட்டுத் தொடரில் பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில் இந்திய பெண்கள் அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டுத் தொடரில் பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில் இந்திய பெண்கள் அணி, காலிறுதிக்கு முன்னேறியது. 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முன்னேறியது.
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, மகளிருக்கான பாட்மின்டன் போட்டி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் இந்திய மகளிர் அணியில் பிவி சிந்து, உன்னட்டி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் இரு முறை பதக்கம் வென்ற சிந்து, போட்டியை முழுப் பொறுப்புடன் தொடங்கினார். கஜகஸ்தானின் கமிலா மகுலோவாவுடன் மோதினார். இதில் 21-7, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனை உன்னட்டி ஹூடா அலிசா குலேஷோவாவுடன் மோதி 21-7, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
மூன்றாவதாக தன்வி ஷர்மா, 21-5, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் டயானா நமேனோவாவை வீழ்த்தினார்.
Asian Games 2026 PV Sindhu, Unnati Hooda, Tanvi Sharma won over Kazakhstan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.