ரபீனியா மீண்டும் ஹாட்ரிக் கோல்..! முதலிடத்தில் நீடிக்கும் பார்சிலோனா!
லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணியின் அசத்தல் வெற்றி குறித்து...
லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தி தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் ரபீனியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். நான்கு நாள்களில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் அடித்து அசத்தியுள்ளார்.
செவில்லா தனது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் பார்சிலோனாவை எதிர்கொண்டது. செவில்லா அணி 19ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்து 1-0 என முன்னிலைப் பெற்றது.
Advertisement
Advertisement
அடுத்ததாக ரபீனியா தொடர்ச்சியாக 22, 52, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். இதில் லமின் யமால் 2 அசிஸ்ட்டுகளும் ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் 1 அசிஸ்ட்டும் செய்து உதவினார்கள்.
இந்தப் போட்டியில் பார்சிலோனா 69 சதவிகித நேரம் பந்தை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். 617 பாஸ்களில் 92 சதவிகித துல்லியத்துடன் பாஸ் செய்து அசத்தினார்கள்.
ரபீனியா ஆட்ட நாயகன் விருது வென்றார். முன்னதாக கடந்த புதன்கிழமை ரேஸிங் சாண்டாண்டர் அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லா லிகா புள்ளிப் பட்டியல் 2026/27
1. பார்சிலோனா - 21 புள்ளிகள் (7 போட்டிகள்)
2. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள் (6 போட்டிகள்)
3. ரியல் பெட்டிஸ் - 15 புள்ளிகள் (6 போட்டிகள்)
4. அத்லெடிகோ மாட்ரிட் - 13 புள்ளிகள் (6 போட்டிகள்)
5. செவில்லா - 13 புள்ளிகள் (7 போட்டிகள்)
5. டெபோர்டிவோ அலாவெஸ் - 11 புள்ளிகள் (7 போட்டிகள்)
Raphinha hits second hat-trick in four days as Barcelona beat Sevilla
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.