FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரபீனியா ஹாட்ரிக் கோல்: பார்சிலோனா (7-2) அபார வெற்றி!

லா லிகா தொடரில் ரபீனியா அசத்தலால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறித்து...

20 வினாடிகள் முன்பு
கோல் அடித்த மகிழ்ச்சியில் கொண்டாடிய ரபீனியா. - படம்: ஏபி
பகிர்:

ஸ்பெயின் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் ரபீனியா அசத்தலால் 7-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் கேப்டன் ரபீனியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

பார்சிலோனா தனது சொந்த மண்ணில் ரியல் ரேசிங் கிளப் உடன் நள்ளிரவு மோதியது. இதில் ஜாவோ கன்சேலா 8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

கேப்டன் ரபீனியா 25 (பெனால்டி), 42, 67 (பெனால்டி) ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து ஹாட்ரிக்கை பதிவுசெய்தார். கேப்ரியல் ஜீசஸ் 67ஆவது நிமிஷத்திலும் லமின் யமால் 89ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

ரியல் ரேசிங் கிளப் ஆறுதலாக 30, 65ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது. மேலும், 36ஆவது நிமிஷத்தில் ஓன் கோல் அடித்து எதிரணிக்கு உதவியது.

இந்தப் போட்டியில் பார்சிலோனா 70 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். பார்சிலோனா அணியினர் அடித்த 28 ஷாட்டில் 11 முறை இலக்கை நோக்கி அடித்தார்கள்.

645 பாஸ்களில் 92 சதவிகித துல்லியத்துடன் பார்சிலோனா விளையாடியது. 18 முறை கார்னர் கிக்கில் வாய்ப்புகளை உருவாக்கியதும் கவனிக்கத்தக்கது.

லா லிகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 18 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 13 புள்ளிகள்

4. செவில்லா - 13 புள்ளிகள்

5. ரியல் பெட்டிஸ் - 12 புள்ளிகள்

6. டெபோர்டிவோ அலாவெஸ் - 10 புள்ளிகள்

summary

Raphinha cashes in against Santander with hat-trick as Barca hit seven

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments