FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மிஷன் ஒலிம்பிக்-2036: திட்ட சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் ஐபிஎஸ் நியமனம்

மிஷன் ஒலிம்பிக்- 2036 திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

22 செப்டம்பர் 2026, 11:26 pm IST
மயில்வாகனன் - FB | A.Myilvaganan
பகிர்:

மிஷன் ஒலிம்பிக்- 2036 திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் தமிழக வீரா், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல சிறப்புப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் விளையாட்டுத் துறை திட்டமிடலை ஒருங்கிணைக்க, மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணை தலைமை செயல் அலுவலராகவும் மயில்வாகனன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலரின் கட்டுப்பாட்டில் அவா் செயல்படுவாா் என்று தலைமைச் செயலா் சாய்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளாா். சிஐடி சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மயில்வாகனன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments