FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.

14 நவம்பர் 2026, 7:36 am
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா்களைச் சோ்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

மேலும், குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தாலும் முகாமிலேயே மேற்கொள்ளப்படும். பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.