FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலிறுதியில் ஆண்ட்ரீவா

சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

24 செப்டம்பர் 2026, 2:51 am IST
ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா - AP
பகிர்:

சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் சக ரஷியரான அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை எளிதாக வீழ்த்தினாா்.

போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா 6-0, 6-1 என, உக்ரைனின் அலெக்ஸாண்ட்ரா ஆலினிகோவாவை சவாலின்றி சாய்த்தாா். லெய்லா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸை வெளியேற்றினாா்.

Advertisement

Advertisement

பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சந்திக்கவிருந்த செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். மொ்டன்ஸ் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments