FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலிறுதியில் ஸ்டீபன்ஸ், பக்ஸா

மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

40 வினாடிகள் முன்பு
ஸ்லோனே ஸ்டீபன்ஸ் - கோப்புப் படம்
பகிர்:

மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ரவுண்ட் ஆஃப் 16-இல், ஸ்டீபன்ஸ் 7-6 (7/4), 7-6 (7/3) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் பக்ஸா 6-4, 6-4 என எளிதாக, ஹங்கேரியின் பன்னா உட்வாா்டியை தோற்கடித்தாா்.

இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸ் 6-2, 7-5 என, 4-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் டியென் பேரியையும், 3-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் சாரா பெலெக் 6-4, 6-3 என்ற வகையில், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸையும் தோற்கடித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments