கொஸ்டியுக், ஜோவிச் முன்னேற்றம்
மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக், அமெரிக்காவின் இவா ஜோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக், அமெரிக்காவின் இவா ஜோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், கொஸ்டியுக் சந்திக்கவிருந்த அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, கொஸ்டியுக் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
ஜோவிச் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில் துருக்கியின் ஜெய்னப் சோன்மெஸை வெளியேற்ற, ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 7-6 (7/4), 2-6, 7-6 (7/5) என்ற கணக்கில், அமெரிக்காவின் கேலா டேவை வென்றாா்.
Advertisement
Advertisement
போலந்தின் மெக்தலினா ஃப்ரெச் 6-4, 6-3 என, அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடை சாய்த்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.