பீலே, நெய்மர் வரிசையில் ரபீனியா..! பிரேசில் கால்பந்து அணியின் ஜெர்ஸி எண்.10!
பிரேசில் கால்பந்து வீரர் ரபீனியாவிற்கு தேசிய அணியில் ஜெர்ஸி எண்.10 கொடுக்கப்பட்டுள்ளது குறித்து...
பிரேசில் கால்பந்து வீரர் ரபீனியாவிற்கு தேசிய அணியில் ஜெர்ஸி எண்.10 கொடுக்கப்பட்டுள்ளது. இது பிரேசில் ரசிகர்களுக்கு சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
கால்பந்து உலகில் பிரேசில் அணிக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் அதில் நம்.10 ஜெர்ஸியை அணிபவர்களுக்கு என்று தனியான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பார்கள். காரணம் அந்த ஜெர்ஸியை அணிந்தவர்கள் ஜாம்பவான்களாக இருந்துள்ளார்கள்.
பிரேசில் அணியில் இதுவரை இந்த எண்.10 ஜெர்ஸியை பீலே (1958-70), ரிவிலினோ (1970), ஜிகோ (1978-1986), ரிவால்டோ (1998-2002), ரொனால்டிங்கோ (2002-2006), காகா (2006-2010), நெய்மர் (2013-2026) என ஜாம்பவான் வீரர்களே இதனை அணிந்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
உலகக் கோப்பை தோல்வியுடன் நெய்மர் தனது ஓய்வை அறிவித்ததால் அந்த ஜெர்ஸி எண்ணை ரபீனியாவிற்கு அளிக்க பிரேசில் கால்பந்து கழகம் முடிவெடுத்துள்ளது.
பார்சிலோனா கிளப்பில் அசத்தலாக விளையாடிவரும் இவர் இந்த சீசனின் டாப் 5 ஐரோப்பிய நாடுகளின் அணிகளை விட சிறப்பாக விளையாடி வருகிறார்.
பிரேசில் அணி அடுத்ததாக ஓசினியா, ஆசிய அணிகளுடன் விளையாட இருக்கின்றன. இந்தியாவுக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதற்கான 26 பேர் கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
29 வயதாகும் ரபீனியா முன்னதாக ஜெர்ஸி எண்.11 அணிந்து வந்தார். தற்போது எண்.10ஐ அணியவிருக்கிறார். மற்றுமொரு நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் அதே 7ஆம் எண் கொண்ட ஜெர்ஸியில் விளையாடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Raphinha handed Neymar's number 10 shirt as Brazil confirm squad numbers for Australia and India friendlies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.