FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது குறித்து...

26 செப்டம்பர் 2026, 12:12 pm IST
இந்திய மகளிர் அணியின் வீராங்கனை. - படம் - ஏஎன்ஐ
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இன்று நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

Advertisement

Advertisement

இந்திய வீராங்கனைகளான திலோத்தமா சென், விதர்சா வினோத் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1763 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதன்மூலம், இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை, 11 பதக்கங்களைக் வென்றுள்ளது.

இதுவரை 2 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 25 பதக்கங்களை வென்று, புள்ளிப்பட்டியலில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. சீனா மொத்தம் 99 தங்கம் உள்பட 162 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

summary

The Indian women's team has won the silver medal at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments