வில்வித்தையில் தேசிய, ஆசிய சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆசிய, தேசிய சாதனைகள் படைத்த இந்திய வீரர் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா ஆசிய மற்றும் தேசிய சாதனைகளை முறியடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா 698 புள்ளிகள் எடுத்து ஆசிய, தேசிய சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தப் பிரிவில் அதிகபட்சமாக 720 புள்ளிகள் (72*10) இருப்பதே கவனிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 70 மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை 72 வில்கள் மூலம் தாக்க வேண்டும். இதில் அவர் 698 புள்ளிகள் பெற்று ஆசிய சாதனை படைத்துள்ளார்.
சக இந்தியர்கள் நீரஜ் சௌஹான் 676 புள்ளிகள் பெற்று 20ஆவது இடமும் யஷ்தீப் போகே 665 புள்ளிகளுடன் 25ஆவது இடமும் பிடித்தார்கள்.
குழு பிரிவில் இந்திய அணி மூன்றாமிடம் பிடித்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சௌஹான், தீராஜ் பொம்மதேவரா அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
இதுவரை இந்தியா 4 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 28 பதக்கங்களை வென்றுள்ளது. தீராஜ் பொம்மதேவரா வில்வித்தையில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்துவாரென்ற நம்பிக்கையை இந்தியர்கள் மனதில் விதைத்துள்ளார்.
Dhiraj Bommadevara breaks Asian and national archery records at Asian Games 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.