4ஆவது முறையாக தங்கம்; இந்திய நாட்டிற்கு பெருமை..! மகளிர் கபடி அணிக்கு ஸ்மிருதி இரானி வாழ்த்து!
ஆசிய விளையாட்டில் தொடர்ச்சியாக தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது...
ஆசிய விளையாட்டில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாழ்த்து கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மகளிர் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஈரான் மகளிரணி உடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 37-34 என்ற புள்ளிகளில் வென்றது. வெறுமனே 4 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
இந்த வெற்றிக்கு முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்! ஈரானுக்கு எதிராக 37-34 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று, நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தையும் தக்கவைத்த இந்திய மகளிர் கபடி அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
களத்தில் ஆதிக்கம் செலுத்தி, அயராமல் தடுப்பாட்டத்தில் உறுதியுடன் இருந்து, தேவைப்படும்போது கிளட்ச் போல ரெய்டு செய்து அசத்தினார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய மகளிரணி நான்காவது முறையாக தங்கத்தை வென்று, மொத்த நாட்டையும் பெருமைக்கொள்ள செய்திருக்கிறார்கள் என்றார்.
India’s 4th Asian Games gold in the event, making the entire nation proud says Smriti Z Irani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.