FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு என்ன செய்தது தி.மு.க.?: விஜயகாந்த்

சென்னை, அக். 8: மாநகராட்சியை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் தி.மு.க., சென்னை மக்களுக்கு என்ன செய்தது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வேல்முருகன்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

சென்னை, அக். 8: மாநகராட்சியை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் தி.மு.க., சென்னை மக்களுக்கு என்ன செய்தது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வேல்முருகன், அம்பத்தூர் பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டு முகப்பேர் பாடிக்குப்பம் பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: சென்னை மாநகராட்சியை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி செய்து வருகிறது. ஆனால் சென்னை மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?. சென்னையை சிங்காரச் சென்னையாக்குவோம் சிங்கப்பூராக்குவோம் என்றார்கள். ஆனால், அரைமணி நேரம் மழை பெய்தாலே சென்னைச் சாலைகள் தாங்குவது இல்லை. சிங்காரச் சென்னை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சி இப்போது 200 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி மாநகராட்சிக்கு அதிக அளவில் கிடைக்கும். மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அந்த நிதி ஒதுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் யாரும் தங்களது சொந்த பணத்திலிருந்தோ, வட்டிக்கு வாங்கியோ நமக்கு எதுவும் செய்வது இல்லை.

நாம் வீடு கட்டினால், மணல் சாலையில் கொட்டப்பட்டுள்ளது என்று முதலில் போலீஸ்காரார் லஞ்சம் கேட்பார். அவருக்கு பின்னால் உள்ளாட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பார்கள், அத்துடன் அப்பகுதி கவுன்சிலர்களும் லஞ்சம் கேட்கின்றனர். இவ்வாறு லஞ்சம் கேட்பவர்கள், நாம் கஷ்டப்பட்டு இடம் வாங்கும்போது எங்கு சென்றார்கள்? இந்த லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை கண்டறிந்து வேரோடு அழிக்க வேண்டும். அதற்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு முறை மாற்றி வாக்களித்து எங்கள் வேட்பாளர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் என்றார் விஜயகாந்த்.

இதைத் தொடர்ந்து அவர், மணலி காமராஜர் சாலை, திருவொற்றியூர் விம்கோ நகர், தேரடி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments