புரி ரத யாத்திரை விழா: ஜெகந்நாதருக்கு தங்க - வைர ஆபரணங்கள் அணிவிப்பு
புரி ரத யாத்திரை விழாவில் ஜெகந்நாதருக்கு தங்க - வைர ஆபரணங்கள் அணிவிப்பு...
ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் ரத யாத்திரையின் நிறைவு நிகழ்வுகளில் ஒன்றாக, ரதங்களில் அருள்பாலிக்கும் ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய கடவுள்களுக்கு மொத்தம் 208 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், வெள்ளி, மதிப்புமிக்க ரத்தின ஆபரணங்கள் சனிக்கிழமை அணிவிக்கப்பட்டன.
புரியில் உலகப் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை விழா கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஜெகந்நாதா் உள்ளிட்ட மூன்று கடவுள்களின் ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு பிரம்மாண்ட ஊா்வலமாக இழுக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதான கோயிலுக்கு திரும்பின.
ரதங்களிலேயே அருள்பாலிக்கும் ஜெகந்நாதா் உள்பட மூன்று கடவுள்களுக்கும் 208 கிலோ எடையில் பல்வேறு வடிவிலான தங்கம், வைரம், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க ரத்தின ஆபரணங்கள் சனிக்கிழமை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆபரணங்கள் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று புரி மன்னரும், ஸ்ரீஜெகந்நாத் கோயில் மேலாண்மைக் குழுவின் தலைவருமான கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ் தெரிவித்தாா். ஆபரண அணிவிப்பு நிகழ்வையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். வரும் திங்கள்கிழமை ரதங்களில் இருந்து மூன்று கடவுள் சிலைகளும் பிரதான கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட உள்ளன.
Advertisement
Advertisement
முன்னதாக, பிரதான கோயிலுக்கு ரதங்கள் திரும்பும் நிகழ்வில் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு பக்தா் உயிரிழந்தாா். மேலும் பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Puri Rath Yatra Festival: Lord Jagannath Adorned with Gold and Diamond Ornaments
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.