FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமைச்சர் கொண்டு வந்த பிரச்னை: உரிமைக் குழுவுக்கு கருணாநிதி பதில்

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்னைக்கான பதிலை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை அளித்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்னைக்கான பதிலை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை அளித்தார். இந்த விளக்கத்தின் அடிப்படையில், உரிமை மீறல் குழுவின் அறிக்கை பேரவையில் செவ்வாய் அல்லது புதன்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
 தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடந்து வருகின்றன.
 கடந்த 25-ஆம் தேதி நடந்த வீட்டுவசதி-வேளாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதிலளித்தார்.
 அப்போது, அவர் சில ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததாக திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கருணாநிதி புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக, கடந்த 30-ஆம் தேதியிட்ட இரண்டு நாளிதழில்களில் அவரது அறிக்கை வெளியாகி இருந்தது.
 பேரவையில், தான் பேசாத விஷயங்களை, பேசியதாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், எனவே, அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவதாகவும் கடந்த 4-ஆம் தேதி பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் அளித்தார்.
 இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் தனபால், மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது, இந்தப் பிரச்னையில் அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால் அதை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று அறிவித்தார்.
 விளக்கம் அளிக்க நோட்டீஸ்: கருணாநிதி மீது எழுப்பப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்னை குறித்து விவாதிக்க, அவை உரிமைக் குழு கூடி விவாதித்தது.
 பிரச்னை குறித்து ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென கடந்த 7-ஆம் தேதி அவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீûஸ ஏற்றுக் கொண்டு, திமுக தலைவர் கருணாநிதி தனது பதிலை திங்கள்கிழமை காலை அளித்தார்.
 ஓரிரு நாள்களில் அறிக்கை: திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ள நிலையில், அவை உரிமைக் குழு தனது அறிக்கையை சட்டப்பேரவையில் செவ்வாய் அல்லது புதன்கிழமை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையை சட்டப்பேரவை துணைத் தலைவரும், குழுவின் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தாக்கல் செய்வார்.
 இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் மீதான உத்தரவுகளை பேரவைத் தலைவர் பி.தனபால் பிறப்பிப்பார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments