சீனப் பட்டாசுகள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு
சீனப் பட்டாசுகள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சீனப் பட்டாசுகள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனப் பட்டாசுகள் மத்திய அரசால் தடைவிதிக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களைக் கொண்டு, வணிக நோக்கம் மட்டுமே கொண்ட சுயநலக்காரர்களால் இறக்குமதி செய்யப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீனப்பட்டாசுக்கு அனுமதி கிடையாது என அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் இந்த அறிவிப்புக்கு முன்பாகவே இறக்குமதி செய்து, விற்பனை செய்ய காத்திருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அந்த பட்டாசுகளை அழிக்கவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.