FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி: ஜெயலலிதாவுக்கு பேரவையில் வரவேற்பு

சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரவையில் கேள்வி நேரம் நடந்து

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரவையில் கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது, காலை 11.02 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா அவைக்குள் வந்தார்.
 அப்போது, அமைச்சர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பேரவை மேஜையைத் தட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர். மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டபோது, உலக முதலீட்டாளர்தள் மாநாட்டில் சுமார் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். அதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் மேஜையைத் தட்டி முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தோம் என்றனர்.
 மாநாட்டுக்கு வரவேற்பு: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
 மேலும், பேரவை விதி 110-இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளை வாழ்த்திப் பேசிய செ.கு.தமிழரசன், உ.தனியரசு, பி.வி.கதிரவன் ஆகியோரும் முதலீட்டாளர்கள் மாநாட்டு வெற்றிக்காக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments