FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

130 காவலர்களுக்கு பதக்கங்கள்

அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி, தமிழகத்தில் காவல் துறையைச் சேர்ந்த 130 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி, தமிழகத்தில் காவல் துறையைச் சேர்ந்த 130 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 தமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத் துறை, ஊர்க்காவல், தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த தினத்தன்று தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு, சிறைத் துறைகளில் தலா 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் எட்டு பேருக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 பேருக்கும் என மொத்தம் 130 பேருக்கு முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments