FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமைச்சர் ஜெயபால் பெயரில் மிரட்டல்: போலீஸார் விசாரணை

வேளாங்கண்ணியில் தொழில் அதிபர் ஒருவருக்கு அமைச்சர் ஜெயபால் பெயரில் மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

வேளாங்கண்ணியில் தொழில் அதிபர் ஒருவருக்கு அமைச்சர் ஜெயபால் பெயரில் மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவது:

வேளாங்கண்ணி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சந்திரா ராயல்ஸ் இன் ஹோட்டலின் உரிமையாளர் ஜெகநாதன் மகன் ஜோசப் செல்வகுமார் (38). செப்.15-ந்தேதி இவருக்கு அலைபேசியிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் என்றும் தனக்கு ரூ. 45000 பணத்தை கரூர் வைஸ்யா வங்கியில் செலுத்தும்படியும் கூறியுள்ளார். அத்துடன் வங்கி கணக்கு எண்ணையும் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆனால் செல்வகுமார் இதனை பொருட்படுத்தாததுடன் பணத்தையும் செலுத்தவில்லை. இதனையடுத்து அந்த நபர் மீண்டும் அழைத்து செல்வகுமாரை மிரட்டினாராம்.

இதுகுறித்து ஜோசப் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments