FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

சத்தியமங்கலத்தில் உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சத்தியமங்கலத்தில் உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வசந்தி என்பவர் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தியை வீட்டு வேலைகளை செய்யுமாறு சார்பு நீதிபதி செல்வம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், துணிகைளை துவைக்க வசந்தி மறுத்தாக கூறப்படுகிறது.

இதனால் வசந்தியிடம் விளக்கம் கேட்டு நீதிபதி செல்வம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து வசந்தியிடம் கேட்ட போது, தனக்கு மெமோ கொடுக்கப்பட்டது உண்மை என்றும், மேலும் இனி நீதிபதி வீட்டில் அனைத்து வேலைகளும் செய்வேன் என்று தன்னிடம் எழுதி வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments