FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜகவில் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது: இன்றும் பெறப்படுகிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
 பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
 சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மனு கொடுப்பதற்காக மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான தொண்டர்கள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனர். பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.2500-ம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று காலையில் இருந்தே ஆர்வத்துடன் தொண்டர்கள் விருப்ப மனு அளித்தனர்.
 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார்.
 தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அவருக்காக வேளச்சேரி, ராதாபுரம், கன்னியாகுமரி, ஆகிய தொகுதிகளில் மனு கொடுக்கப்பட்டது. இதேபோன்று, கோவை தெற்கு, மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் சார்பிலும் மனு செய்யப்பட்டது.
 வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். சனிக்கிழமையும் மனுக்கள் பெறப்படுகின்றன. நேர்காணல், வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments