"பிரச்னைகளை துணிவுடன் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும்'
பெண்கள் அன்றாடம் வீட்டில், பணிபுரியும் இடம் மற்றும் வெளி வட்டாரங்களில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை பயந்து ஒதுங்காமல்
பெண்கள் அன்றாடம் வீட்டில், பணிபுரியும் இடம் மற்றும் வெளி வட்டாரங்களில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை பயந்து ஒதுங்காமல் துணிவுடன் எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை காவல்துறை உதவி கமிஷனர் சியாமளாதேவி கூறினார்.
வடபழனி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் நலன், பாதுகாப்புப் பயிலரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
பெண்கள் தங்களது குடும்ப, அலுவலகப் பிரச்னைகள் குறித்து தங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் கூறி ஆலோசனை பெற வேண்டும். பெண் காவல்துறை உதவிக்கு 24 மணி நேரமும் 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம். தங்களது குடும்பப் பிரச்னை தொடர்பாக ஏதேனும் கவுன்சிலிங் தேவைப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் உதவியைப் பெறலாம்.
குடும்பப் பிரச்னை, நெருக்கடி காரணமாக வீட்டில் தங்க முடியாத சூழலில் பெண் காவல்துறை உதவி கோருவோருக்கு பாதுகாப்பான தங்குமிடம் உதவி கிடைக்கும். பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஏதேனும் இடையூறு, மிரட்டல் உள்ளிட்ட பிரச்னைகள் நேரிட்டால் உதவிக்கு காவல்துறையை, பெண்கள் தைரியமாக அணுகலாம்.
பொது இடங்களில் பெண்களுக்கு ஏதேனும் அநீதி நிகழ்ந்தால் பயந்து ஒதுங்காமல் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.