மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டியில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'லீவ்'!
அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் ...
சென்னை: அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் .
Advertisement
Advertisement
மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவை எங்கள் அமைப்பு எடுத்திருக்கிறது.
இதற்கு முன்னர் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.