சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்துக்கு தனிப் பாதை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப் பாதை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப் பாதை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்குரைஞர் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலின்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப்பதை என்பது முக்கியத் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.