FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகாராஷ்டிர அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா ? டிடிவி தினகரன் கேள்வி

தமிழக விவசாயிகள் விவாகரத்தில் முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி....

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:49 pm IST
டிடிவி தினகரன்
பகிர்:

தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிர மாநில அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிர மாநில அரசின் அடக்குமுறையையாவது தமிழக முதல்வர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மௌனம் காப்பாரா ?காவிரி நதிநீர் மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக தில்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி தில்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ? கர்நாடக மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது.

Advertisement

Advertisement

எனவே, தில்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

summary

Will CM Vijay condemn Maharashtra govt's repression of Tamil Nadu farmers? AMMK chief TTV Dhinakaran questions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments