சமையல் எரிவாயு விலை ரூ.35.50 உயர்வு
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) வரை ரூ.770.50-ஆக இருந்தது. அதன் விலை புதன்கிழமை (ஆக.1) முதல் ரூ.806-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மானியத்துடன் கூடிய...மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.484.67-லிருந்து ரூ.486.42-ஆக புதன்கிழமை (ஆக.1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1.75 உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு? சமையல் எரிவாயு உருளைக்கு புதன்கிழமை (ஆக.1) முதல் பதிவு செய்வோர் ரூ.806 செலுத்த வேண்டும். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.319.58 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.