FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேருந்தில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரத்திலிருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் மதுரையில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 2:25 am IST
பகிர்:

ராமநாதபுரத்திலிருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் மதுரையில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் திருச்சி வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் திருச்சி மண்டலப் பகுதியில் விமான நிலையம் மற்றும் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 
அதன்படி புதன்கிழமை இரவு மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ராமநாதபுரத்திலிருந்து சென்னை சென்ற பேருந்தில் 3 பயணிகள், சந்தேகத்துக்கிடமான வகையில் பெரிய அளவிலான தோள் பைகளை வைத்திருந்தனர். அதனை சோதனையிட்டதில் சுமார் 11.15 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 3. 32 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments