6 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
கோவையில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து,அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
காயமடைந்த மூன்று பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.