FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை

காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். 

திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு 29-ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 

அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

எனினும், கருணாநிதியின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று பாதிப்பை ("சீரியஸ் செப்ஸிஸ்') அகற்றுவதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிரை வழியே தொடர்ந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை திடீரென்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனால், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் முதன்முறையாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இவர்களைத் தொடர்ந்து மு.க.தமிழரசு, மு.க. அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். 

கருணாநிதியை சந்தித்த பிறகு, அவர் நலமாக உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்தார். 

இதையடுத்து, தற்போது மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். 

திங்கள்கிழமை மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments