அண்ணா அணிவித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்
அண்ணா அணிவித்த மோதிரத்துடனேயே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அணிவித்த மோதிரத்துடனேயே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த லட்சக்கனக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்தனர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.
1959ஆம் ஆண்டு மாதம் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. கருணாநிதியால் இந்த வெற்றி கிடைத்தது என்று அவருக்கு, அண்ணா ஒரு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். கருணாநிதி இறுதி வரை அந்த மோதிரத்தை பொக்கிஷமாக கருதினார். எந்த சூழ்நிலையிலும் அதை தனது விரலில் இருந்து கழற்றியதே இல்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் மோதிரத்தை கழற்றுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்போதும்கூட மோதிரத்தை கழற்ற கருணாநிதி மறுத்துவிட்டார். இறுதியில் அந்த மோதிரத்துடனே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக எம்.ஜி.ஆரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவருடன் கைக்கடிகாரம் புதைக்கப்பட்டது. அதுபோல ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது கைக்கடிகாரமும் புதைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.