FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின், துரைமுருகன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நல்லகண்ணு உடல்நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகனும் உடன் சென்றார். 

Advertisement

Advertisement

முன்னதாக மு.க.ஸ்டாலின் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments