கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்: மு.க. அழகிரி
கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 7ஆவது நாளாக இன்றும் மதுரையில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயார். கட்சியில் சேர்த்துககொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளதானே வேண்டும். பொதுக்குழு மட்டுமே திமுக அல்ல, பொதுக்குழுவில் 1,500 பேர் மட்டுமே உள்ளனர். கட்சியைக் காப்பாற்றவே திமுகவில் இணைய விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
துரை தயாநிதிக்கு கட்சியில் எந்த பதவியும் கேட்கவில்லை. தனக்கும், தயாநிதிக்கும் அந்த ஆசையில்லை. செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கும் அமைதி பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள். பேரணி நடத்துவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.