தியாகராஜர் கோயில் மண்டபத்தில் விரிசல்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் அலுவலகம் இயங்கும் வசந்தன் மண்டபத்தின் முகப்பு கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் அலுவலகம் இயங்கும் வசந்தன் மண்டபத்தின் முகப்பு கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சர்வதோஷ பரிகார தலமான கோயிலாகும். பழைமை வாய்ந்த இக்கோயில் கட்டப்பட்டதற்கான முழுமையான வரலாறு கிடையாது. இருப்பினும், 1000 ஆண்டுகளுக்கும் மேலான தஞ்சைப் பெரிய கோயிலானது, திருவாரூர் தியாகராஜர் கோயிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜர் கோயில் மேலகோபுர வாசல் வாயில் வழியாக சென்றால் வசந்தன் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் செயல் அலுவலர் அலுலகம், அருங்காட்சியகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. திருவாதிரை நாளில் தியாகராஜர் இந்த வசந்தன் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில், இந்த மண்டபத்தின் முகப்பில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தை கடந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே, விரிசல் விழுந்த முகப்பு பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.