நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்ட வற்றில் புனரமைப்புப் பணிகள் 2016-ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னிதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவிலும், தொடர்ந்து நடைபெற்ற கோபூஜையில் முதல்வர் பங்கேற்றார். இதையடுத்து, அவர் தரிசனம் செய்தார். முதல்வருடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கோ பூஜையில் பங்கேற்று, பசுவுக்கு பழம் அளிக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மனைவி ராதா .
நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், செம்மலை, ராஜா, மருதமுத்து, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன்,உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.