FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஜினியின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது

ரஜினியின் கொள்கை முடிவை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நெய்வேலி: ரஜினியின் கொள்கை முடிவை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
சாதி, மத அமைப்பு ரீதியாக உள்ளவர்களுக்கு தனது மன்றத்தில் இடமில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதை ஜனநாயக ரீதியாக வரவேற்கிறேன். இதை நடைமுறைப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன் என்றார் அவர்.
திரைப்பட நடிகர் விஷால் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்குப் பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என பலரும் நினைக்கின்றனர். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், முடிவு மக்கள் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments