மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: மூன்றாம் பாலினத்தவர்க்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கோரியிருந்தாவது:
'தமிழக அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் கணவனால் கை விடப்பட்டோருக்கு என தனியாக இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல மூன்றாம் பாலினத்தவர்க்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவர்களிலும் பட்டப் பப்பு மற்றும் பொறியியியல் முடித்தவர்கள் இருக்கிறாரகள். தகுந்த வாய்ப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வரும் 17-ஆம் தேதியன்று பதில் அளிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கினை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.