FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கன்னியாகுமரியில் கட்டப்பட்ட புதிய இரண்டு பாலங்கள் இன்று திறப்பு

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கன்னியாகுமரியில் கட்டப்பட்ட புதிய இரண்டு பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கன்னியாகுமரியில் கட்டப்பட்ட புதிய இரண்டு பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் ரூ.325 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக இப்பாலங்களில் போக்குவரத்து சேவை இன்று முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக திறந்த பின்னர் மக்கள் பாலத்தை பார்வையிட முடியாது என்பதால், திறப்பு விழாவிற்கு முன்னதாக பாலத்தை மக்கள் பார்வையிடும் வகையில் கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

Advertisement

Advertisement

அண்மையில் மார்த்தாண்டம் மேம்பாலம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. மார்த்தாண்டம் பாலத்தை பார்வையிட்ட மக்கள் பாலத்தில் இருந்து சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று முடிந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பாலம் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments