5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்
44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கடந்த 1972ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக்கை தொடங்கிய இவர் ஆரம்பத்தில் ரூ.2 மட்டுமே கட்டணம் பெற்று வந்தார்.
பின்னர் ரூ.5 கட்டணம் பெற்ற இவரிடம் பெரும்பாலும் ஏழை எளிய மக்களே சிகிச்சை பெற்று வந்தனர். ஜெயச்சந்திரன் இதுவரை 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரில் எம்பிபிஎஸ் முடித்த ஜெயச்சந்திரன் கடந்த 44 ஆண்டுகளாக மருத்து சேவை புரிந்து வந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராயபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஜெயசந்திரனின் மரணம் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி சென்னை சென்ட்ரல் பொது நல மருத்துவமனையில் டீன் ஆக இருந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவரும் மருத்துவர்கள்தான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.