FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.16 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 67.16ஆக விலை

30 ஜனவரி 2024, 11:29 pm IST
பகிர்:


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.16 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 67.16ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது.

Advertisement

Advertisement

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகமாக இருந்து வந்தது.

இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக எந்தவித மாற்றமின்றியும், சிறிது குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது

இந்நிலையில், சென்னையில், நேற்றைய விலையில் இருந்து இன்று பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 72.16 ஆகவும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ. 67.16 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments