முகப்பு
தமிழ்நாடு

வைரமுத்துவைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்!   

ஆண்டாள் பற்றிக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி 2018, 6:36 pm IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் பற்றிக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார். 

கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வெளியாகி பெரும் சர்ச்சையினைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆண்டாள்  பக்தர்களின் மனதினை புண்படுத்தி விட்டதாக அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

அத்துடன் ஆண்டாள் பற்றிக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் முதலில் உண்ணாவிரதமிருந்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தினைக் கைவிட்டார்.  

Advertisement

Advertisement

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார்.  இதனால் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments