FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!

விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 7:30 pm IST
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற ஆக. 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு ஆக. 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு(eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற ஆக. 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A special camp for fingerprint and iris verification will be held at all fair price shops in Tamil Nadu on the upcoming 8th and 9th of August.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments