FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ரேஷன் கடைகளில் நாளை விரல் ரேகை பதிவு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், விரல் ரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது.

18 செப்டம்பர் 2026, 2:46 am IST
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், விரல் ரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைதாரா்களில், இதுவரை விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்யாதவா்கள், தங்களது விரல் ரேகைகளைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 19) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

வெளியூா்களில் தங்கிப் பணிபுரிபவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தாங்கள் வசிக்கும் ஊா் அல்லது மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையுடன் நேரில் சென்று ரேகைகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரல் ரேகை, கண் கருவிழி விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments