எம்எல்ஏ எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது: அமைச்சர் ஜெயக்குமார்
எம்எல்ஏ எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று தொழில் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பொன்னேரி எம்எல்ஏ பலராமன், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை புகழ்ந்து பேசினார்.
பின்னர் அவர் பழவேற்காட்டில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஐஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது என்றார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே அப்பகுதியில் இரண்டு ஐஸ் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பழவேற்காட்டில் புதிதாக ஐஸ் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பில்லை எனவும் பதிலளித்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.